ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நேற்று காலை தென்காசிக்கு வந்தார். அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் வந்திருந்தார். விழாவை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை புறப்பட்டார்.
இந்நிலையில் துர்கா ஸ்டாலின், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலினுக்கு ஆண்டாள் வஸ்திரம் மற்றும் கிளி பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்பு ஆண்டாள் பிறந்த இடத்தில் சாமி தரிசனம் செய்தார். வடபத்ர சயனர் என அழைக்கப்படும் பெரிய பெருமாள் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.