ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில்வேளாண் சிறப்பு முகாம்

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் வேளாண் சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-03-12 18:45 GMT

சாத்தான்குளம்:

ஸ்ரீவெங்டேஸ்வரபுரம் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வேளாண் சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட 13 துறைகளில் விவசாயிகள் தங்களது அடிப்படை விவரங்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் துறைசார்ந்த நலத்திட்ட உதவிகள், மானிய தொகை மற்றும் நிவாரணத் தொகையை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறுவதற்காக இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு தாசில்தார் தங்கையா தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் மஸபியேல், டாலி சுபலா, துரைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் தாலுகாவில் 437 விவசாயிகள் தங்களது அடிப்படை விவரங்களை பதிவு செய்தனர். இதில் விவசாயிகளின் ஆதார் நகல், பட்டா நகல், போட்டோ மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்