ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தில்சமுதாய வளைகாப்பு விழா

ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

Update: 2023-10-09 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கி 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பானு, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன், வெள்ளூர் பஞ்சாயத்து தலைவர் குமார் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்