ஸ்ரீவைகுண்டம் பள்ளியில்பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-05-16 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் தொடக்கப ்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் கல்வி சார்ந்த திட்டங்கள், பள்ளி மற்றும் மாணவர்களின் ஒழுக்கம், கல்வித்தரம் குறித்து பெற்றோர்களிடம் கலந்துரையாடால் நிகழ்ச்சி நடந்தது. 2023-2024-ம் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உடற்பயிற்சி, ஆங்கில பேச்சுப்பயிற்சி, சிலம்பாட்டம், யோகா வகுப்புகள், நன்னெறி வகுப்புகள் நடைபெற திட்டமிடப்பட்டது. இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியகழகத்தலைவர் தியாகச்செல்வன் தலைமை தாங்கினார்.கல்வி புரவலரும் ஓய்வு பெற்ற வட்டாரவளர்ச்சி அலுவலர் ராஜப்பாவெங்கடாச்சாரி, ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கத்தலைவர் சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிதலைமை ஆசிரியை ராணி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கல்வி நலன்சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. கூட்டத்தில்பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் திரளான பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்