சிவத்தையாபுரம் பள்ளியில் கராத்தே பெல்ட் போட்டி
சிவத்தையாபுரம் பள்ளியில் கராத்தே பெல்ட் போட்டி நடந்தது.
சாயபுரம்:
சிவத்தையாபுரம் நேஷனல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கராத்தே பெல்டுக்கான போட்டிகள் நடைபெற்றது. போட்டிக்கு பள்ளி தலைமை ஆசிரியை பெர்டிவ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் அருள்லிபின் வரவேற்றார். இப் போட்டியில் மஞ்சள் பெல்ட் தேர்வுக்கு 41 மாணவர்களும், ஆரஞ்சு பெல்ட் தேர்வுக்கு 2 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் ஜிகான்சங்கர் பெல்ட்டுகளை வழங்கினார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்த மாஸ்டர்கள் முத்துமாலை, சங்கர் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.