சிவகிரி விற்பனை கூடத்தில்ரூ.1¼ கோடிக்கு எள் ஏலம்
சிவகிரி விற்பனை கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு எள் ஏலம் போனது.
சிவகிரி
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 1,267 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் கருப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.136.99-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.150.99-க்கும் ஏலம் போனது.சிவப்பு ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.125.09-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.157.99-க்கும் ஏலம் போனது.வெள்ளை ரக எள் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.128.99-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.149.49-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 94,703 கிலோ எடையுள்ள எள் ரூ.1 கோடியே 32 லட்சத்து 16 ஆயிரத்து 743-க்கு விற்பனையானதாக ஈரோடு விற்பனை குழுவின் செயலாளர் ஆர்.சாவித்ரி தெரிவித்தார்.