செம்மறிகுளத்தில் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

செம்மறிகுளத்தில் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-09-22 18:45 GMT

மெஞ்ஞானபுரம்:

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மறிகுளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதியில் இருந்து புதிதாக ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செம்மறிக்குளத்தில் நடைபெற்றது. விழாவுக்கு உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். செம்மறிக்குளம் ஊராட்சி தலைவர் அகஸ்டா மரிய தங்கம் முன்னிலையில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் ரூ.7.82 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க.மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி ராஜ பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்