தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் 4 வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் 4 வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சாத்தான்குளம் வடக்கு ரத வீதியை சேர்ந்த சங்கரன் மகன் வெங்கடேஷ் (வயது 28), தெற்கு ரத வீதியைச் சேர்ந்த முருகன் மகன் முத்துகண், வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் நாராயணன் (25) ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். இதே போன்று தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்த பரமசிவன் மகன் சுடலைமணி (39) என்பவரை ஒரு கொலை வழக்கில் தென்பாகம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், வெங்கடேஷ், முத்துகண், நாராயணன், சுடலைமணி ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை 86 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.