சாத்தான்குளம் பள்ளியில் 202 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

சாத்தான்குளம் பள்ளியில் 202 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2022-10-21 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ ஆர். எம்.பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் ஏ.எஸ். கிருபாகரன் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, பேருராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய், பொறியாளர் ஆர். ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெபசிங் மனுவேல் வரவேற்றார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 202 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசினார்.

இதில் ஒன்றிய தி.மு.க. செயலர் ஏ.எஸ். ஜோசப், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் து. சங்கர், வட்டாரத் தலைவர்கள் வி. பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், கோதாண்டராமன், ஜெயசிங், புங்கன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜோசப் அலெக்ஸ். லிங்கபாண்டி, பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் அழகேசன், வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி பாலா, நகர மகிளா காங்கிரஸ் தலைவி புளோராராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், ஏரல் அருகே உள்ள கொற்கையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நிழற்குடையை திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கொற்கை பஞ்சாயத்து தலைவர் முருகேசன், துணைத்தலைவர் மீனாட்சி, யூனியன் கவுன்சிலர் பாரத், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுரேஷ், ஆன்றோ, பொறியாளர் ஹரிஷ், தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், கிழக்கு வட்டார தலைவர் தாசன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்