சாலைபுதூர் அரசு சுகாதார நிலையத்தில்உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்பு

சாலைபுதூர் அரசு சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-25 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று உலக மலேரியா தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. டாக்டர் கிஷோர் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார், லேப் டெக்னிசியன் விமல், கிராம சுகாதார செவிலியர்கள் சொர்ணலதா, மகேஸ்வரி, லட்சுமி, நாகவள்ளி, மெர்சி, சாந்தி உள்ளிட்ட சுகாதார நிலைய ஊழியர்கள், ஆஷா, டெங்கு மஸ்தூர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்