ராமசுப்பிரமணியபுரத்தில்இந்து அன்னையர் முன்னணி சிறப்பு வழிபாடு

ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-04-17 18:45 GMT

உடன்குடி:

செம்மறிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் 101-வது வார வழிபாடு நடந்தது. இதில் தலைவி சூரியகலா, துணைத்தலைவி மல்லிகா, செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, பத்திரகாளி, துணைத்தலைவி சொர்ணமணி, ஒன்றிய தலைவி அமுதசுரபி, இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு இந்துக்கள் ஒற்றுமை பற்றி பேசினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று செம்மரிக்குளம் சத்யாநகரில் நடந்த வழிபாட்டிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்