தபால் அலுவலகங்களில்ஆதார் சிறப்பு முகாம்கள்

தபால் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன.

Update: 2023-01-20 18:45 GMT

பொதுமக்கள் பலர் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேனி தபால் கோட்டத்தில் தலைமை தபால் அலுவலகங்கள், துணை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு புதிதாக ஆதார் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 2-ந்தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவலை தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்