பெருந்துறை-சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெருந்துறை-சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
அரிசி, கோதுமை, பால் மற்றும் தயிருக்கு, ஜி.எஸ்.டி. விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து, பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பெருந்துறை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள, உணவுப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. விதிப்பை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதேபோல் சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எம்.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.