நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில்பழைய மாணவர் சங்க ஆண்டு விழா
நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் பழைய மாணவர் சங்க ஆண்டு விழா நடந்தது.
நாசரேத்:
நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் 49- ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கிறிஸ்து சிற்றாலயத்தில் சிறப்பு விருந்து, ஆராதனையை குருவானவர் செல்வராஜ் நடத்தினார். சபை ஊழியர் ஸ்டான்லி வேதபாடம் வாசித்தார்.
பின்னர் நடைபெற்ற ஆண்டு விழா பொதுக்குழு கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் தங்கராஜ் ஜெபம் செய்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல் அருள்தம்பி அனைவரையும் வரவேற்றார். இணைச் செயலாளர் ஜான் தாமஸ் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர்கள் தங்களது கற்றல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பழைய மாணவர் சங்க செயலாளர் ஜோசப் தொகுத்து வழங்கினார். தணிக்கையாளர் சாலமோன் ஜெபஸ்டின் நன்றியுரை ஆற்றினார். பாஸ்டர் விக்டர் சீனிவாசன் நிறைவு ஜெபம் செய்தார். விழாவில் ஆர்ட் தொழிற் பள்ளி தாளாளர் எட்வர்ட்டு கண்ணப்பா, முதல்வர் ஸ்டீபன், தொழிற்பயிற்சி மைய மேலாளர் அகஸ்டின் உட்பட முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.