நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
ஏகாதசியையொட்டி நேற்று, பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
ஏகாதசியையொட்டி நேற்று, பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணர்-ராதை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திரம், லட்சுமி அஷ்டோத்திரம், குருஜி அஸ்டோத்திர அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் 12 மணி நேரம் 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற மந்திரம் முழங்கப்பட்டது.
இதையடுத்து உலக நன்மை, குழந்தைகள் கல்வி, மழை பெய்து விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.