நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளியில்பரிசளிப்பு விழா
தேனி நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்ற போட்டிகள், கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில், பள்ளி செயலாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் விஜய், கார்த்திகேயன் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.