மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மேயர், கமிஷனர் ஆய்வு

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

Update: 2023-01-30 21:14 GMT


மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

உத்தரவு

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதி, மழைநீர் வடிகால் வசதி, பஸ்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிகள், நடைபாதை வசதிகள், வாகன பாதுகாப்பு, பொருட்கள் பாதுகாப்பு அறை, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து தினந்தோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நல்வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அவர்கள் பஸ் நிலையத்தை தூய்மையாக தினமும் பராமரிக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

பாதாள சாக்கடை

முன்னதாக மேயர், கமிஷனர் ஆகியோர் 61-வது வார்டு எஸ்.எஸ்.காலனி சித்தாலாட்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். அப்போது இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின் போது மண்டலத்தலைவர் சரவணபுவனேஸ்வரி, நகர பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத் குமார், உதவி கமிஷனர்கள் வரலட்சுமி, மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்) சுப்புத்தாய், காமராஜ், உதவி செயற்பொறியாளர் சேகர், உதவிப்பொறியாளர் பொன்மணி, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் நல்லுச்சாமி, கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்