மாணிக்கவாசபுரத்தில் புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

மாணிக்கவாசபுரத்தில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.;

Update: 2023-09-26 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மாணிக்கவாசகபுரத்தில் சீரான மின் விநியோகம் செய்யும் வகையில் மின்வாரியம் சார்பில் 63 கே.வி. திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு திறப்புவிழா நடந்தது. விழாவுக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிந்தரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ஜோசப் முன்னிலை வகித்தார். இளநிலை பொறியாளர் நாகராஜன் வரவேற்றார். இதில் சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவர் ரெஜினிஸ்டெல்லா பாய் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். இதில் பேரூராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்