மணப்பாடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-10-25 18:45 GMT

உடன்குடி:

தீபாவளி பண்டிகையை விடுமுறையை ஒட்டி நேற்று மணப்பாடு கடற்கரையில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் களைகட்டி காணப்பட்டது.

மணப்பாடு கடற்கரை

குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள மணப்பாடு கடற்கரையை ஒட்டி இயற்கையாக அமைந்துள்ள உயரமான மணல் குன்று, அதன் மீதுள்ள திருச்சிலுவை நாதர் ஆலயமும், இதற்கு பின்புறம் உள்ள கலங்கரை விளக்கம், புனித சவேரியார் வாழ்ந்த குகை, தியான மண்டபம், நாழிக்கிணறு ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக உவரி, கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயனிகள்மணப்பாடு கடற்கரை வராமல் செல்வதில்லை.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நேற்று இயற்கை எழில் சூழந்த மணப்பாடு கடற்கரை பகுதியில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குடும்பத்தினருடன் மணல் குன்றின் மீதுஏறி விளையாடியும், கடலில் நீராடியும் மகிழ்ந்தனர். மேலும், திருச்சிலுவை நாதர் ஆலயம், கலங்கரை விளக்கம், புனித சவேரியார் வாழ்ந்த குகை, தியான மண்டபம், நாழிக்கிணறு ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்பட்டனர். சாரல் மழை பெய்ததால் சில்லென்று வீசிய தென்றல் காற்றுடன் கடற்கரையில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகையை ஒட்டி கடற்கரையில் மீன்கள், நண்டு, இறால் போன்றவை சுடச்சுட எண்ணையில் பொறித்து விற்பனை களைகட்டி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்