மதுக்கூரில், தென்னை விவசாயிகள் ஊர்வலம்
மதுக்கூரில், தென்னை விவசாயிகள் ஊர்வலம் நடந்தது.
தேங்காய் ஒன்றுக்கு ரூ.25 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதனை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.250 நிர்ணயம் செய்ய வேண்டும். தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கூரில் ஒன்றிய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. மதுக்கூர் வடக்கு பெரமையாகோவிலில் இருந்து தொடங்கி ஆற்றுப்பாலம், மெயின் ரோடு, பஜனை மட தெரு வழியாக மதுக்கூர் பஸ் நிலையத்தை ஊர்வலம் வந்தடைந்தது. மதுக்கூரில், தென்னை விவசாயிகள் ஊர்வலம்இதில் 500-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.