லிங்கம்பட்டியில்பனைமர விதைகள் நடவு

லிங்கம்பட்டியில் பனைமர விதைகள் நடவு நிகழ்ச்சிநடந்தது.;

Update: 2022-12-21 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், லிங்கம்பட்டி ஊராட்சி மன்றம் சார்பில் அங்குள்ள கண்மாயில் 1000 பனைமர விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்க நிறுவனர் பி.கே.நாகராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஓவர்சீயர் வடிவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் ஆகியோர் நடவு பணியை தொடங்கி வைத்தனர். பின்னர் 2500 புங்கை மர விதைகளை சங்க நிறுவனர், ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கினார். விழாவில் ஊராட்சி செயலாளர் தேவிகா, பணிதள பொறுப்பாளர் ராமலட்சுமி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் மந்திதோப்பு, ஊத்துபட்டி, கெச்சிலாபுரம் கண்மாய்களிலும் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்