கும்பகோணத்தில், குடிகள் மாநாடு
ஜமாபந்தி நிறைவு நாளையொட்டி கும்பகோணத்தில், குடிகள் மாநாடு நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் 5-வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியை தொடர்ந்து கும்பகோணம் கோட்டாட்சியர் தலைமையில் குடிகள் மாநாடு நடந்தது. இதில் 915 மனுக்கள் பெறப்பட்டு 115 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மாநாட்டில் கும்பகோணம் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பிரேமாவதி, வட்ட வழங்கல் அலுவலர் மதுசூதனன், தலைமை இடத்து துணை தாசில்தார் பாக்யராஜ், கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் தமிழ்செல்வி, மண்டல துணை தாசில்தார்கள் சாந்தமீனா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.