கோவில்பட்டிதலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா
கோவில்பட்டிதலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது.;
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தினமும் அஞ்சல் துறையின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து எடுத்துரைக்க அக்.13-ந் தேதி வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று(புதன்கிழமை) கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பார்த்து பயனடையும் வண்ண தபால் தலை கண்காட்சியும், நாளை(வியாழக்கிழமை) வாடிக்கையாளர்கள் கூட்டமும் நடக்கிறது. இக்கூட்டத்தில் பழைய வாடிக்கையாளர்களை கவுரவப்படுத்தப்படுவர். மேலும், புதிய சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு கணக்கு, மகளிருக்கான சிறப்பு சேமிப்பு கணக்கு, அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், பொதுமக்கள் எளிதாக தொடங்கும் வகையில் அனைத்து அஞ்சலகங்களிலும் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்கள் வண்ண மின் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அஞ்சல் வார கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.