கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக கழிப்பறை தின விழா

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக கழிப்பறை தின விழா நடந்தது.

Update: 2022-11-20 18:45 GMT

கோவில்பட்டி:

நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக கழிப்பறை நினைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுகாதார ஆய்வாளர் காஜா நஜூமுதீன் கலந்துகொண்டு கழிப்பறையின் முக்கியத்துவம், சுத்தமாக பராமரித்தல், சுகாதார பழக்கவழக்கங்கள் பற்றி பேசினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சுகாதார உறுதிமொழி ஏற்றனர். கடந்த அக்டோபர் மாதம் மத்திய- மாநில அரசுகளின் அறிவுறுத் தலின்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்குவது சார்பாக, பொதுமக்களிடம் சிறப்பான முறையில் பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய பள்ளிகளில், மாநில அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட நாடார் நடுநிலைப்பள்ளிக்கான பாராட்டு சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் சுகாதார ஆய்வாளர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பரப்புரையாளர்கள் ராம்

குமார், நித்தீஷ், ராஜேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி

கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்