கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் புத்தக கண்காட்சி திறப்பு
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் புத்தக கண்காட்சி வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையும் கண்காட்சி நடக்கிறது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான புத்தக கண்காட்சி திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் செல்வி, முன்னாள் மாணவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிருத்திகா பதிப்பக உரிமையாளர் ராஜபாண்டி வரவேற்றார். கண்காட்சியை 6-ம் வகுப்பு மாணவிகள் சபிஹா, சாதனா. ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்காட்சியை கண்டுகளித்தனர். இன்றும்(வெள்ளிக்கிழமை) நடைபெறும் இக்கண்காட்சியில் தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அறிவியல், அகராதி, இலக்கியம், கட்டுரை, நாவல் ஆகிய தலைப்புகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.