காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கு பயிற்சி முகாம்
காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் நகா்மன்ற அலுவலகத்தில் காயல்பட்டினம் நகராட்சி கவுன்சிலர்கள், ஆறுமுகனேரி பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு கல்விசாா் கடமைகள், பள்ளி மேலாண்மைக்குழு பங்களிப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
இப்பயிற்சியில், குழந்தைகளின் உரிமைகள், தடையற்ற கட்டாய குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டம்-2009, பள்ளி மேலாண்மைக்குழு, பள்ளி மேம்பாட்டுத் திட்டம், அரசுப் பள்ளிகளுக்கு பங்களிக்கும் பிற துறைகள், நகா்ப்புற ஊரக உள்ளாட்சி அமைப்பு, பிரதிநிதிகளின் பொறுப்பும் கடமையும் ஆகியவை சாா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம், காயல்பட்டணம் நகராட்சி துணை தலைவர் சுல்தான் லெப்பை மற்றும் காயல்டனபட்டணம், ஆறுமுகநேரி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.