கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.72 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.72 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது

Update: 2022-11-20 00:19 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3 ஆயிரத்து 484 மூட்டை களில் நாட்டு சர்க்கரையை கொண்டு வந்தனர்.இதில் முதல்தர திடம் ரக சர்க்கரை 60 கிலோ மூட்டை குறைந்தபட்ச விலையாக 2,500 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2,590 ரூபாய்க்கும் விற்பனையானது.

அதேபோல் மீடியம் ரக சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 450 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் ஏலம் போனது.

மொத்தம் 2 ஆயிரத்து 900 மூட்டைகளில் உள்ள 1 லட்சத்து 74 ஆயிரம் கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை 72 லட்சத்து 84 ஆயிரத்து 100 ரூபாய்க்கு பழனி பால தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது.

இந்த தகவலை விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்