காமக்காபட்டி சோதனை சாவடியில்சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி தகராறு:2 பேர் கைது
காமக்காபட்டி சோதனை சாவடியில் சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமக்காபட்டி வன சோதனை சாவடி அருகே சென்றபோது 2 பேர் சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். மேலும் அவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். இதைக்கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லாரி டிரைவர்களான கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த சூசைமுத்து (வயது 39), கொடைக்கானல் அட்டுவம்பட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.