கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில்புதிய கலையரங்கம் கட்டுவதற்கு பூமி பூஜை

கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.

Update: 2023-04-26 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு தலைமை தாங்கினார். தி.மு.க நகர செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புதிய கலையரங்கத்திற்கான பூமி பூஜையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் விளாத்திகுளம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்