கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் 138 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் 138 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2022-11-04 18:45 GMT

கயத்தாறு:

கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளி பொதுச்செயலாளர் எஸ்.ஏ.டி.காளிராஜன் தலைமை தாங்கினார். இந்து நாடார் உறவு முறை தலைவர் எஸ்.ஜெயராஜ் நாடார், பள்ளிச் செயலாளர் கே.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் கடம்பூர் பேரூராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி கலந்துகொண்டு 138 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாரீஸ்வரி, முன்னாள் துணைத் தலைவர் நாகராஜா, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், இந்து நாடார் உறவின் முறை பொருளாளர் அருணாசலம், பள்ளிக்குழு தலைவர் ராம்குமார், உறவின்முறை துணை தலைவர் மகாராஜன், சான்றோர் தொடக்கப்பள்ளி செயலாளர் ராஜன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், புங்கராஜ், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

கயத்தாறு பேரூராட்சி பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கன்னியம்மன் கோவில் தெருவில் மின்மோட்டார் இணைப்புடன் குடிநீர் தொட்டி அமைக்கவும், அசனார் நகரில் குடிநீர் மோட்டார் அறை கட்டவும், அரசன்குளம் வார்டில் புதிய சுடுகாட்டு கொட்டகை அமைக்கவும் பூமி பூஜை நடந்தது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜேந்திரன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், வெயிலாட்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்