கயத்தாறு அரசு பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டி தொடக்கம்

கயத்தாறு அரசு பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டி தொடங்கியது.;

Update: 2023-07-27 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக குறுவட்டம் அளவில் 42 பள்ளிகள் விளையாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இப்போட்டிகளை மாவட்ட கவுன்சிலர் ப்ரியா குருராஜ் தொடங்கி வைத்தார்.

இதில் கழுகுமலை, வானரமுட்டி செட்டிகுறிச்சி, காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் சுதா, உடற்பயிற்சி ஆசிரியர்கள் சுப்புராஜ், ராஜதுரை, சுரேஷ், ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்