எட்டயபுரத்தில்ரூ.20 ஆயிரம் கடனுக்காக வியாபாரி கடத்தல்

எட்டயபுரத்தில் ரூ.20 ஆயிரம் கடனுக்காக வியாபாரி கடத்தப்பட்டார். இதுதொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2023-04-23 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் ரூ.20 ஆயிரம் கடனுக்காக வியாபாரியை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டீ வியாபாரி

எட்டயபுரம் உமறுப்புலவர் பகுதியைச் சேர்ந்தவர் உமர் (வயது 40). டீ வியாபாரி. இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நென்மேனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சின்ன முப்பிடாதி (65) என்பவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். இந்நிலையில் உமர் ரூ.30 ஆயிரத்தை சின்ன முப்பிடாதியிடம் அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.20ஆயிரத்தை உமர் திருப்பி கொடுக்காமல் காலம்கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மினி ஆட்டோவில் கடத்தல்

மேலும் உமரை அடிக்கடில் செல்போனில் தொடர்பு கொண்டு சின்ன முப்பிடாதி பணத்தை கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவரது செல்போன் அழைப்பை உமர் தவிர்க்க தொடங்கி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த சின்ன முப்பிடாதி, அவரது மகன் விக்னேஸ்வரன் (34) மற்றும் சாத்தூர் நென்மேனி பகுதியைச் சேர்ந்த முருகன் (என்று) சின்ன நைனார் மகன் கருப்பசாமி (என்ற) கண்ணன் (33) மற்றும் சிலருடன் சேர்ந்து கடந்த 21-ந் தேதி மினி ஆட்டோவில் எட்டயபுரம் வந்துள்ளார். அங்கு வீடு அருகே நின்றுகொண்டிருந்த உமரை அவர்கள் மினி ஆட்டோவில் கடத்தி சென்று விட்டனர்.

3 பேர் கைது

பின்னர் மினி ஆட்டோவில் வைத்து பணத்தை கொடுக்குமாறுகூறி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். அவர் கூச்சல் ேபாட்டதைதொடர்ந்து, வேம்பார் - மேலக்கரந்தை சாலையில் உமரை அவர்கள் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து உமர் அளித்த புகாரின் பேரில் எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா வழக்கு பதிவு செய்து உமரை கடத்தி தாக்கியதாக சின்ன முப்பிடாதி, விக்னேஸ்வரன் மற்றும் கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும், உமரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மினி ஆட்டோ பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்