எட்டயபுரத்தில்இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-14 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். எட்டயபுரம் நகரில் அனைத்து வார்டுகளிலும் கலப்படம் இல்லாத சீவலப்பேரி குடிநீர் வழங்க வேண்டும், எட்டயபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஸ்நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். நகர பொருளாளர் குருநாதன் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் நல்லையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி செயலாளர் பாலமுருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் சோலையப்பன், தாலுகா குழு உறுப்பினர் ரவீந்திரன், உதவி செயலாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்