ஈரோட்டில் பரவலாக மழை

ஈரோட்டில் பரவலாக மழை பெய்தது.

Update: 2023-09-07 00:54 GMT

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் வழக்கம்போல வெயில் சுட்டெரித்தது. பகல் 11 மணிக்கு மேல் வானில் மேக மூட்டம் கூட தொடங்கியது. வெயிலின் தாக்கம் குறைந்தாலும், வெப்பம் கடுமையாக இருந்தது. மதியம் 2 மணி அளவில் சிறு சாரலாக தொடங்கிய மழை சுமார் 40 நிமிடங்கள் தூறலாக பெய்தது. சில பகுதிகளில் வலுத்தும், சில பகுதிகளில் மிதமாகவும் மழை பெய்தது.

கடந்த சில நாட்களாகவே ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதன்படி நேற்று காலை வரை பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

கொடிவேரி அணை- 6.2

கோபி------------------- 5.2

வரட்டுப்பள்ளம்

அணை-----------------3.6

சத்தியமங்கலம் --------3

குண்டேரிபள்ளம்

அணை ----------------2.4

மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்