சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) ரத்து செய்ய வேண்டும். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, ராஜ்கமல், நகர செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர்கள் தியாகராஜன், சிராஜிதின் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அசரப்அலி, பிரதாப்குமார், சரவணன், மோகன், பரமேஸ்வரன், மகேஸ்வரி, சூசந்தா உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.