அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கொங்கு வடக்கு மண்டல அமைப்பு செயலாளர் கே.சுரேஷ் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் எம்.குருநாதன் (ஈரோடு புறநகர் வடக்கு), சண்முகம் (ஈரோடு புறநகர் மேற்கு), கே.சீனிவாசன் (ஈரோடு புறநகர் தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.சின்னசாமி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்திட வலியுறுத்தியும், மது மற்றும் போதை பொருட்களை முற்றிலும் அகற்றிட கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் வினோத் (நாமக்கல் மத்தி), குட்டி என்கிற ஜனகராஜ் (நாமக்கல் மேற்கு), என்.பாலகிருஷ்ணன் (நாமக்கல் கிழக்கு) மகேஸ்வரன் (கரூர் மேற்கு), கொங்கு வடக்கு மண்டல நிலைய செயலாளர் பொன்முத்து உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.