ஈரோட்டில்பிளம்பர் வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு

ஈரோட்டில் பிளம்பர் வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டுகிப்போனது

Update: 2023-09-30 20:48 GMT

ஈரோடு ரங்கம்பாளையம் ரெயில் நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 38). பிளம்பர். இவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி யுவராஜ் தனது குடும்பத்தினருடன் ஈரோடு அருகே ஆர்.என்.புதூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அதன் பின்னர் நேற்று காலை 5 மணி அளவில் யுவராஜ் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன. மேலும் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. மேலும் குழந்தைகள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தையும் மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர்.

இதைத்தொடர்ந்து யுவராஜ் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பணம், நகையை திருடிச்ெசன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்