ஈரோட்டில் ரூ.60 லட்சம் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் திறப்பு
ஈரோட்டில் ரூ.60 லட்சம் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
ஈரோடு காந்திஜி ரோட்டில் வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் கே.விவேகானந்தன், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், எம்.எல்.ஏ.க்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாச்சலம், சி.கே.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நவீனப்படுத்தப்பட்ட வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் கோ-ஆப்டெக்ஸ் முதன்மை பொதுமேலாளர் அலோக் பபிலோ, பொதுமேலாளர்கள் ஆர்.வாசு (ஏற்றுமதி), ஏ.பி.ரவி (விற்பனை), கோவை மண்டல மேலாளர் நந்தகுமார், மேலாளர்கள் அன்பழகன் (அரசுதிட்டம்), கஜேந்திரன் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி), விற்பனை நிலைய மேலாளர் பிரியா, கைத்தறி உதவி இயக்குனர் சரவணன், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.பி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.