ஈரோட்டில்பணிக்கு திரும்பிய சுமை தூக்கும் தொழிலாளர்கள்

ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினாா்கள்

Update: 2023-07-21 22:34 GMT

ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஈரோடு பார்க் ரோட்டில் தினமும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் தினந்தோறும் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் குடோன்களில் தேக்கம் அடைந்தன.

இந்த நிலையில் வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் கோரிக்கையை ஏற்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர். இதனால் நேற்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு திரும்பினர். இதன்காரணமாக குடோன்களில் கடந்த 8 நாட்களாக தேங்கி கிடந்த பார்சல்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்