ஈரோட்டில்தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

ஈரோட்டில் தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனா்

Update: 2023-05-29 20:50 GMT

ஈரோட்டில் தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண் பாதுகாப்பு கேட்டு போலீசில் காதலனுடன் தஞ்சம் அடைந்தார்.

காதல்

சித்தோடு குமிலன்பரப்பு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் மோகன் திலீப் (வயது 23). எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து உள்ள அவர் சைசிங் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரங்கம்பாளையம் பகுதியில் ஒரு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஈரோடு முத்தம்பாளையம் வெள்ளைபாறை பகுதியை சேர்ந்த தங்கராஜின் மகள் கவுசல்யா (20) என்பவர் பி.காம். படித்து வந்தார். அவர் தற்போது பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டார்.

அவர் கல்லூரியில் படித்தபோது மோகன் திலீப்புடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களுடைய காதல் விவரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. இதில் கவுசல்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய கவுசல்யா கடந்த 27-ந் தேதி மோகன் திலீப்பை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

இந்தநிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தது. இதுகுறித்து மோகன் திலீப் கூறுகையில், "நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாதுகாப்பு கேட்டு சித்தோடு, பவானி போலீஸ் நிலையங்களுக்கு சென்றோம். அங்கு பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தவில்லை. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தோம்", என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்