ஈரோட்டில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய நண்பர் கைது

ஈரோட்டில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய நண்பர் கைது செய்யப்பட்டாா்

Update: 2023-06-21 21:06 GMT

ஈரோடு சூரம்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குண்டு ராமு என்கிற ராமச்சந்திரன் (வயது 35). கூலி தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்தவர் கந்தன் என்கிற யோகமூர்த்தி (42). சமோசா வியாபாரி. இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று சூரம்பட்டி பகுதியில் நின்று கொண்டு இருந்த ராமச்சந்திரனை, யோகமூர்த்தி அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய யோகமூர்த்தியை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்