ஈரோட்டில்குடிபோதையில் எலக்ட்ரீசியன் அடித்து கொலை

ஈரோட்டில் குடிபோதையில் எலக்ட்ரீசியனை அடித்து கொலை செய்த சமையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-04-14 21:39 GMT

ஈரோட்டில் குடிபோதையில் எலக்ட்ரீசியனை அடித்து கொலை செய்த சமையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

எலக்ட்ரீசியன்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48) எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேந்திரன், தனது நண்பரான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சமையல் தொழிலாளியான கண்ணன் என்கிற கண்ணப்பன் (45) என்பவருடன், ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார்.

அங்கு 2 பேரும் மது அருந்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜேந்திரனும், கண்ணப்பனும் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு சந்துக்கு சென்று மீண்டும் மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அடித்து கொலை

தகராறு முற்றியதில் ராஜேந்திரனை, கண்ணப்பன் பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் ராஜேந்திரன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. பின்னர் மயங்கி கீழே விழுந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணப்பனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்