ஈரோட்டில்ஸ்டூடியோவில் தீ விபத்து

ஈரோட்டில் ஸ்டூடியோவில் தீ விபத்து நடந்தது

Update: 2023-05-10 21:10 GMT

ஈரோடு பூசாரி சென்னிமலை வீதியில் உள்ள வணிக வளாகத்தில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடியோ ஸ்டூடியோ கடை உள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் நேற்று காலை 10 மணிக்கு கடையை திறந்து வழக்கமான பணிகளை மேற்கொண்டார். அப்போது, கடையில் உள்ள மின் சாதனங்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைத்தொடர்ந்து அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கடையின் மின் இணைப்பை துண்டித்தார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமார் 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலிகள், டெக்கரேஷன் பேப்பர், அழகு சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்