ஈரோடு ஜவுளிச்சந்தையில் சில்லரை விற்பனை மும்முரம்
ஈரோடு ஜவுளிச்சந்தையில் சில்லரை விற்பனை மும்முரமாக நடந்தது.
ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை வரை வாரச்சந்தை கூடுகிறது. அதுபோல் இந்த வாரம் கூடிய சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பலர் ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக வந்திருந்தனர். வெயிலின் தாக்கம் குறையாததால் காட்டன் ரக துணிகளின் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனால் பனியன், துண்டு, வேட்டிகள், காட்டன் சேலைகள் உள்ளிட்டவற்றின் வியாபாரம் களைகட்டியது.