ஈரோடு சூளையில் சாலையின் நடுவில் உருவான பள்ளம்
ஈரோடு சூளையில் சாலையின் நடுவில் உருவான பள்ளம் ஏற்பட்டுள்ளது.;
ஈரோடு சத்தி ரோட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி சூளை எல்.வி.ஆர்.காலனி பிரிவு பகுதியில் சாலையோரமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அதற்கு அருகில் மண் நிரப்பப்பட்டு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அந்த வழியாக கழிவுநீர் சென்றபோது மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் சாலையின் நடுவில் திடீர் பள்ளம் உருவானது.
அந்த வழியாக நடந்த சென்றவர்கள் சிலர் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், ரோட்டின் நடுவில் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால் எல்.வி.ஆர்.காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மக்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டியுள்ளது. எனவே திடீர் பள்ளத்தை சரிசெய்து அந்த வழியாக போக்குவரத்து மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.