ஈரோட்டில் செவித்திறன் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோட்டில் செவித்திறன் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-09-22 21:42 GMT

ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று ஈரோட்டில் நடந்தது. ஊர்வலத்துக்கு சங்க தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் 'சைகை மொழி காது கேட்போரையும், காது கேளாதோரையும் இணைக்கிறது. காது கேளாதோரிடம் உங்களால் நட்பு கொள்ள முடியும், கூச்சல் இன்றி ஒரு அறையில் உங்களால் பிறரிடம் தொடர்பு கொள்ள முடியும், சைகை மொழி கற்பதால், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும், நமது ஆற்றல் திறன் உயர்கிறது என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் பெருந்துறை ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் ரோடு வழியாக சி.எஸ்.ஐ. பள்ளிக்கூட வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்