ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் விழிப்புணர்வு சுற்றுலா

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் விழிப்புணர்வு சுற்றுலா நடந்தது.

Update: 2023-10-13 01:19 GMT

உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவிடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் பவானி, கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிக்கூடங்களில் படிக்கும் 65 மாணவர்கள் விழிப்புணர்வு சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த மாணவர்கள் 65 பேரும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். பின்னர், அங்கிருந்து பஸ் மூலம் ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக மாணவர்கள் சென்ற பஸ்சை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடா்ந்து அரசு அருங்காட்சியகத்திற்கு வந்த மாணவர்கள், அங்கிருந்த பழமையான கல்வெட்டுகள், சிற்பங்கள், பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் உடல்கள் உள்ளிட்டவைகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி, அருங்காட்சியகம் குறித்தும், விலை மதிப்பில்லாத பொருட்கள், வரலாற்று சுவடுகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் மணி உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்