ஈரோட்டில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

ஈரோட்டில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.

Update: 2023-09-22 00:19 GMT

ஈரோடு காளைமாடு சிலை அருகே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு ஈரோடு பிரிவின் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய இரட்டிப்பு ஊதியம், மருந்து செலவினங்கள், ஜி.பி.எப்., முன்பணம், பகுதி இறுதி தொகை உள்பட பண பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். இ-டெண்டர் முறையை கைவிட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு, விருப்ப மாறுதல் உள்பட வாரிய பணியாளர்களுக்கான பணி விதிமுறைகளை அமலாக்க வேண்டும். 2019-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களையும், பகுதி நேர பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில துணைத்தலைவர் இளங்கோ, துணைச்செயலாளர் ஸ்ரீதேவி, ஈரோடு மண்டல செயலாளர் ஜோதிமணி மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் மின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்