ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு சூரம்பட்டிவலசு நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்குப்பதிவு செய்வதை கைவிடக்கோரியும், அவதூறு வழக்கில் எம்.பி. பதவியை திட்டமிட்டு தகுதி இழப்பு செய்ததாக பா.ஜ.கவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.