ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்முதல் முறையாக 100 அடி உயரத்தில் கம்பம் அமைப்பு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முதல் முறையாக 100 அடி உயரத்தில் கம்பம் அமைக்கப்பட்டது.

Update: 2023-08-15 22:48 GMT

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் முதல் முறையாக 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றும் விழா சுதந்திர தினமான நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி தேசியக்கொடியை ரிமோட் மூலமாக ஏற்றி வைத்தார்.

விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, துணை கலெக்டர் மணிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.3 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட பூங்காவை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்